நெல் சாகுபடி செய்வது எப்படி என்ற கேள்விக்கு முழு விளக்கத்துடன் – குறுகிய கால மற்றும் நீண்ட நாள் வயதுடைய நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை.
புதிதாக இயற்கை விவசாயத்தில் வருபவர்களுக்கு இருக்கும் பல கேள்விகள் உள்ளடக்கி , எத்தனை நாட்களில் என்னென்ன இயற்கை உரம், மருந்து, வளர்ச்சி ஊக்கி, கொடுக்க வேண்டும் என முழு விவரங்களுடன். நண்பர்களுடன் பகிருங்கள்.
நெல் சாகுபடி செய்வது எப்படி முழு விவரம்
வயது : 110 லிருந்து 150 நாள் வரை.
சிறப்பம்சங்கள்:
- நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(11 லிருந்து 18 நாள்) நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும்.
- ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம் தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் .
- ஒருங்கிணைந்த பயிர் வளர்ச்சி முறையால் தோன்றும் பக்ககிளைப்புகள் அனைத்திலும் நெற்கதிர்கள் உருவாகி நிறைந்த மகசூலை அடையலாம்.
- ஓருங்கிணைந்த, பயிர்பாதுகாப்பு மற்றும் பயிர்வளர்ச்சி அட்டவணையை செயல்படுத்துவதால், பயிரின் வளர்ச்சியை சிறப்பாக முறைபடுத்தலாம்.
- நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ ஊட்டஉரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம் பாசனநீரில் கலந்து விட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும்.
- நாற்றுக்களை நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும்.
நெல் பயிரின் மொத்த வளர்ச்சி காலத்தில் என்ன செய்யவேண்டும்
- 10 முறை கடலைபுண்ணாக்கு கலந்த ஜீவாமிர்த பாசனம்.
200 லிட்டருக்கு 2 லிட்டர் நன்கு புளித்த கடலைபுண்ணாக்கு (1 கிலோ கடலைபுண்ணாக்குடன் 2 லிட்டர் தண்ணீர் விட்டு 3 நாட்கள் புளிக்க வைத்து பயன்படுத்தவும்) கலந்து விடுவதால் நுண்ணுயிர்களின் பெருக்கம் மிக சிறப்பாக இருக்கும். - 8 இலைவழி தெளிப்புகள் .
8 ல் நான்கு பயிர்வளர்ச்சி ஊக்கியும், நான்கு பயிர்பாதுகாப்பும் இருத்தல் நலம். - # 4 முறை ஊட்டஉரம் பயன்பாடு.
ஒன்று அடியுரமாகவும், இரண்டு மற்றும் மூன்றாவது உரம் வளர்பருவத்திலும், நான்காவது தொண்டை உருட்டும் (கதிர்கள் உருவாகும் தருணம்) பருவத்திலும் இட வேண்டும். - ஊட்டஉரம் இடும்போது நிலத்தில் தண்ணீர் நிறுத்துதல் அவசியம். பாசனத்தில் ஜீவாமிர்தம் கலந்து தண்ணீர் நிறுத்திய பின் ஊட்டஉரம் இட வேண்டும்.*
- வளர்பருவத்தில் தரப்படும் ஊட்டஉரத்திற்கு பின்னர் கோனோவீடர் பயன்பாடு மற்றும் இலைவழி தெளிப்பு போன்றவற்றை முறையே மேற் கொள்வதின் மூலம், வேருக்கும், இலைக்கும் ஒரே சமயத்தில் ஊட்டம் கிடைப்பதால் வளர்ச்சி* *தொய்வில்லாமல் சீராய் இருக்கும்.*
- 3 முறை கோனோவீடர் பயன்பாடு.
- ஒவ்வொரு கோனோவீடர் பயன்பாட்டிற்கு முன் தினம் பாசனநீரில் கடலைபுண்ணாக்கு கலந்த ஜீவாமிர்தம் மற்றும் இஎம், மீன்அமிலம், பஞ்சகவியம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளில் ஏதேனும் ஒன்றை கலந்து நிலத்தில் தண்ணீரை ஒரு நாள் நிறுத்திய பின்னர், மறுநாள் கோனோவீடர் போடவும்.
- இவ்வாறு இடுபொருள் கலந்து தண்ணீரை நிறுத்துவதால் நிலத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் பன்மடங்கு பெருகுவதோடு, நிலத்தின் வெடிப்புகளால் உருவான மண்ணின் இறுக்கம் தளர்ந்து, மண்ணின் தன்மை இலகுவாக இருக்கும்,இதனால் கோனோவீடரை பயன்படுத்தும்போது,
- சேறு நன்கு கலங்கி களைகள் மடியும்.
- 1 கைகளை எடுக்க வேண்டும்.
- நடவிலிருந்து 3 ம் நாள் உயிர்தண்ணீர் விட வேண்டும், பாசன நீரில் ஜீவாமிர்தம் ,
கடலைபுண்ணாக்கு, இஎம் கலந்து விடவும்.(2) - 13வது நாள் — பஞ்சகவியம் கடலைபுண்ணாக்கு, மீன்அமிலம் பாசனம்.(3)
- 15வது நாள் — கோனோவீடர்.(1)
- 16 வது நாள் — சூடோமோனஸ், வசம்புகரைசல் ஸ்பிரே.(1)
- 23 வது நாள் — ஜீவாமிர்தம், கடலைபுண்ணாக்கு, பஞ்சகவியம் பாசனம்.(4)
- 24 வது நாள் — ஊட்ட உரம். (2)
- 25 வது நாள் — கோனோவீடர்(கோனோவீடர் போடும்போது பயிர்களின் இடைவெளியில் உள்ள களைகளை ஆட்களை வைத்து கைகளை எடுக்க வேண்டும்) (2)
- 26 வது நாள் –மீன்அமிலம் ஸ்பிரே.(2)
33 வது நாள் — பஞ்சகவியம், க.பு, இஎம் பாசனம். (5) - 35 வது நாள் — கோனோவீடர்.(3)
- 36 வது நாள் — மூலிகை பூச்சவிரட்டி ஸ்பிரே.(3)
- 43 வது நாள் — ஜீவாமிர்தம், க.பு, மீன்அமிலம் கலந்த பாசனம்.(6)
- 44வது நாள் — ஊட்ட உரம் (3)
- 45 வது நாள் — இஎம், கடலைபுண்ணாக்கு ஸ்பிரே.(4)
- 55 வது நாள் பொன்னீம் ஸ்பிரே(5)
- 60 வது நாள் — பஞ்சகவியம் பாசனம். (7).
- 61 வது நாள் — பஞ்சகவியம் ஸ்பிரே.(6)
- 70 வது நாள்– ஜீவாமிர்தம்,க.பு,
மீன்அமிலம் பாசனம் (8) - 73 வது நாள் — ஊட்டஉரம் (4).
- 75 வது நாள் — அக்னிஅஸ்திரம் ஸ்பிரே. (7)
- 80 வது நாள் — ஜீவாமிர்தம், க.பு, இஎம் பாசனம்(9)
- 81 வது நாள் — தேமோர் கரைசல் ஸ்பிரே(8)
- 90 வது நாள் — ஜீவாமிர்தம், க.பு, மீன்அமிலம் பாசனம்.(10).
*இடுபொருள் பாசனம் –10*
*இலைவழி தெளிப்பு — 8*
*ஊட்டஉரம் — 4*
*கோனோவீடர் — 3*
*கைகளை — 1*
குறிப்பு:
நீண்ட கால பயிருக்கு தொண்டை பருவத்தின் போது, மட்டும் மீண்டும் ஒரு முறை ஊட்ட உரம் வாய்மடையில் கொட்டி, ஜீவாமிர்த பாசனம் செய்ய வேண்டும்.
நன்றி : பிரிட்டோ ராஜ் .
- Like
- Digg
- Del
- Tumblr
- VKontakte
- Buffer
- Love This
- Odnoklassniki
- Meneame
- Blogger
- Amazon
- Yahoo Mail
- Gmail
- AOL
- Newsvine
- HackerNews
- Evernote
- MySpace
- Mail.ru
- Viadeo
- Line
- Comments
- Yummly
- SMS
- Viber
- Telegram
- Subscribe
- Skype
- Facebook Messenger
- Kakao
- LiveJournal
- Yammer
- Edgar
- Fintel
- Mix
- Instapaper
- Copy Link
Leave a Reply