பொதுவாக மாமரங்கள் நவம்பர் 15 ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை பூக்கும் காலம் ஆகும். பருவநிலை மாற்றங்கள் மற்றும் மழைப்பொழிவின் மாற்றங்களினால் மா மரத்தில் பூ பூப்பது சில சமயம் டிசம்பர் 1ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை கூட நடக்க வாய்ப்பு உண்டு.
நம்முடைய மாமரத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்த தற்போதுள்ள மாதங்களில், ஒவ்வொரு மாதத்திற்கும் கீழ்க்கண்ட இடுபொருட்களை மரங்களுக்கு கொடுக்கலாம்.
ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் வாரம் ஒரு தண்ணீர் தருவது என கணக்கில் கொண்டால், ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு பாசனத்திற்கும், ஒவ்வொரு வாரமும் 25 முதல் 30 மில்லி அளவிலான மீன் அமிலம் அல்லது பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் தரலாம் வேஸ்ட் டீகம்போஸர் என்றால் ஒரு மரத்திற்கு முக்கால் லிட்டர் அளவுக்கு கொடுக்கலாம்.
ஜீவாமிர்தம் ஒரு மரத்திற்கு ஒரு பாசனத்திற்கு 3 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை தரலாம்.
மாதத்திற்கு 4 பாசனம் என்றால் ஒரு பாசனத்தில் மீனமிலம் அடுத்த பாசனத்தில் ஜீவாமிர்தம் அடுத்த பாசனத்தில் வேஸ்ட் டீகம்போஸர் அல்லது பஞ்சகாவியா அடுத்த பாசனத்தில் இஎம் கரைசல் என்ற அமைப்பில் தரைவழி கலந்து மாலை வேளையில் கொடுக்கலாம்.
தற்போதுள்ள ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் பத்து லிட்டருக்கு 75 மில்லி மீன் அமிலம் அல்லது 300 மில்லி இஎம் கரைசல் அல்லது பஞ்சகாவ்யாவை என கலந்து மரங்களின் மேல் தெளிக்கலாம்.
அக்டோபர் மாதத்தில் முடிந்த வரை எந்த தெளிப்பும் கொடுக்காமல், பூக்க வேண்டிய காலமான நவம்பர் மாதத்தில் பத்தாம் தேதிக்கு மேல் 10 நாள் இடைவெளியில் (Nov 15, 25 Dec 10) இரண்டு அல்லது மூன்று முறை, பத்து லிட்டருக்கு அரை லிட்டர் பஞ்சகாவ்யா அல்லது இ .எம் கரைசல் அல்லது தேமோர் கரைசல் கலந்து தெளிக்கலாம்.
பொதுவாக மரங்களில் இந்த காலத்தில் பூ பூக்காமல் இருந்தால், எப்போதாவது ஒரு மரத்தில் பூ வருகிறதோ , அதை அடிப்படையாக வைத்து இக்கரைசலை 10 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கலாம்.
தகவல் :
பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்
- Like
- Digg
- Del
- Tumblr
- VKontakte
- Buffer
- Love This
- Odnoklassniki
- Meneame
- Blogger
- Amazon
- Yahoo Mail
- Gmail
- AOL
- Newsvine
- HackerNews
- Evernote
- MySpace
- Mail.ru
- Viadeo
- Line
- Comments
- Yummly
- SMS
- Viber
- Telegram
- Subscribe
- Skype
- Facebook Messenger
- Kakao
- LiveJournal
- Yammer
- Edgar
- Fintel
- Mix
- Instapaper
- Copy Link
Leave a Reply