கன ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி என்ற கேள்வி புதிதாக இயற்கை விவசாயத்திற்க்கு வரும் விவசாயிகளிடம் எழும் முக்கியமான கேள்வி, அதற்கான விடை இந்த பதிவில்.
வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் அவர்கள் தரும் மிகவும் எளிதான முறையில் எப்படிகன ஜீவாமிர்தம் தயாரிக்கலாம் என்பதை நீங்கள் அறியலாம்.
கன ஜீவாமிர்தம் செய்ய தேவையான பொருட்கள் :
- பசுஞ்சாணம் 100 கிலோ
- 2 கிலோ வெல்லம்,
- 2 கிலோ பயறு மாவு
தயாரிப்பு முறை :
- மேல் குறிப்பிட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
- உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு நாட்டு மாட்டுச் சிறுநீரை கலக்க வேண்டும்.
- பின்பு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும் போது உதிர்த்துப் பயன்படுத்தலாம்.
கன ஜீவாமிர்தம் எந்த பயிர்களுக்கு பயன்படுத்தலாம் ?
- தோட்டக்கலைப் பயிர்கள், தென்னை நடும்போது குழிகளுக்குள் இவ்விதமான ஜீவாமிர்தத்தை ஒரு குழிக்கு ஒரு கிலோ என்ற அளவில் பயன்படுத்துவது நல்லது.
- நெல் உற்பத்திக்கு அடியுரமாக ஒரு ஏக்கர் நிலத்திற்கு 200 கிலோ கனஜீவாமிர்தம் செய்து பரப்பிவிட்டு நாற்றை நடலாம்.
- காய்கறிப் பயிர்கள், பயறுவகைப் பயிர்கள் மற்றும் மக்காச்சோளம் பயிறு பயிரிடும் நிலங்களில் அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 300 கிலோ கனஜீவாமிர்தம் தயாரித்து தூளாக்கி முறையாக கடைசி உழவின்போது தெளித்து உழுது பயன்படுத்துவது நல்லது.
- தொழுவுரம் அதிகம் கிடைக்காத இடங்களில் கிடைக்கும் மாட்டின் சாணத்தை கனஜீவாமிர்தம் ஆக மாற்றி நிலங்களில் கொடுத்து பயன்படுத்துவது நல்லது.
விவசாயிகள் இப்படி எளிதாக கன ஜீவாமிர்தத்தை தயார் செய்து பயன்படுத்தி மண் வளத்தையும் , பயிர் வளர்ச்சியையும் பெருக்கி பயன் பெறலாம்.
- Like
- Digg
- Del
- Tumblr
- VKontakte
- Buffer
- Love This
- Odnoklassniki
- Meneame
- Blogger
- Amazon
- Yahoo Mail
- Gmail
- AOL
- Newsvine
- HackerNews
- Evernote
- MySpace
- Mail.ru
- Viadeo
- Line
- Comments
- Yummly
- SMS
- Viber
- Telegram
- Subscribe
- Skype
- Facebook Messenger
- Kakao
- LiveJournal
- Yammer
- Edgar
- Fintel
- Mix
- Instapaper
- Copy Link
Leave a Reply